டாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி
இந்தியா முழுக்க இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் விற்பனையகங்களில் தேர்வு செய்யப்பட்ட ஷோரூம்களில் டாடா கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது. 
வாடிக்கையாளர்கள் இந்த பலன்களை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சலுகை டாடா அல்ட்ரோஸ் மற்றும் நெக்சான் இவி மாடல்களுக்கு வழங்கப்படவில்லை. 
டாடா ஹேரியர் எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி, எக்ஸ்இசட்ஏ பிளஸ் மற்றும் டார்க் எடிஷன் வேரியண்ட்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவியின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டாடா டிகோர்
டாடா நெக்சான் மாடலுக்கு ரூ.5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, டீசல் வேரியண்ட்டிற்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. டாடா டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Click here to join
Telegram Channel for FREE