இந்தியாவில் ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 விலை உயர்வு

ஃபோர்டு நிறுவனம் தனது எண்டெவர் பிஎஸ்6 காரின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி உள்ளது.

இந்தியாவில் ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 விலை உயர்வு
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் 2020 ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 மாடல்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் துவக்க விலை ரூ. 29.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபோர்டு எண்டெவர் மாடல் டைட்டானியம் 4x2 ஏடி, டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி மற்றும் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஏற்கனவே இந்த மாடல்களின் விலையை உயர்த்த ஃபோர்டு திட்டமிட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விலை உயர்வு தாமதமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6
புதிய பிஎஸ்6 ரக எண்டெவர் மாடல்களின் விலை ரூ. 44 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. டைட்டானியம் 2.0 4x2 ஏடி மாடல் துவக்க விலை ரூ. 29.99 லட்சம், டைட்டானிம் பிளஸ் 2.0 4x2 ஏடி மாடல் ரூ. 32.75 லட்சம், டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி மாடல் விலை ரூ. 34.45 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2020 ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 காரில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் முந்தைய மாடலில் இருந்ததை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

Click here to join
Telegram Channel for FREE