மோட்டோரோலா ரேசர் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு

மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா ரேசர் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு
மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. முன்னதாக மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

முன்னதாக கடந்த மாதம் வெளியான ரென்டர்களின் படி புதிய தலைமுறை மோட்டோ ஸ்மார்ட்போன் ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. இதில் கைரேகை சென்சார் கீழ்புறத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
 மோட்டோரோலா ரேசர் 2
முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி வசதி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இத்துடன் புகைப்படங்களை எடுக்க சாம்சங்கின் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரேசர் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் குவிக் வியூ டிஸ்ப்ளே சார்ந்த புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

Click here to join
Telegram Channel for FREE