ஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி வரைபடங்கள் வெளியீடு

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

ஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி வரைபடங்கள் வெளியீடு
ஸ்கோடா நிறுவனம் என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஆகும். விரைவில் இந்த மாடலின் உற்பத்தி துவங்க இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய என்யாக் மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்இபி பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும். ஸ்கோடா என்யாக் காரில் ஃபோக்ஸ்வேகன் ஐடி 3 மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் பாடி பேனல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் செக் குடியரிசில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 
 ஸ்கோடா என்யாக் ஐவி
ஸ்கோடா என்யாக் மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. புதிய என்யாக் மாடல் 2022 ஆம் ஆண்டிற்குள் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடும் ஸ்கோடா நிறுவன திட்டத்தின் முதல் கார் ஆகும்.  
புதிய ஸ்கோடா என்யாக் மாடலில் 72kWh யூனிட் பேட்டரி வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Click here to join
Telegram Channel for FREE