'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்

'போர்ட்நைட்' என்ற அமெரிக்க ஆன்லைன் வீடியோ கேம், 'எபிக் கேம்ஸ்' நிறுவனத்தால் கடந்த 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 'பப்ஜி' போன்று இதுவும் துப்பாக்கி சுடும் ஆன்லைன் கேம்.

'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்

'போர்ட்நைட்' என்ற அமெரிக்க ஆன்லைன் வீடியோ கேம், 'எபிக் கேம்ஸ்' நிறுவனத்தால் கடந்த 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 'பப்ஜி' போன்று இதுவும் துப்பாக்கி சுடும் ஆன்லைன் கேம். இது, உலகம் முழுக்க கேம் பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்கு தளங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒரே நேரத்தில் இதில், 4 பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து ஆன்லைன் மூலம் இணைந்து விளையாடலாம்.

latest tamil news

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தை சேர்ந்த டிம் ஸ்வீனே, ஏபிக் கேம்ஸ் நிறுவனத்தை 2017ம் ஆண்டு உருவாக்கினார். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் இந்த கேமை விளையாடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு இந்த நிறுவனம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டி ஆன்லைன் கேம் உலகில் கொடிகட்டிப் பறந்தது.


latest tamil news

தற்போது போர்ட்நைட் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு ஆன்லைன் கேமிலும் வாடிக்கையாளர் பணம் செலுத்தி அப்கிரேடட் வெர்ஷனில் விளையாட, இயங்குதளங்களில் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றவேண்டும். ஆனால் 'எபிக் கேம்ஸ்' குழுமம் இந்த சட்டத்தை பின்பற்றாமல் வரம்பு மீறி செயல்பட்டதால் கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளன.


latest tamil news

இதையடுத்து, 'எபிக் கேம்ஸ்' நிறுவனர், தன் பக்க நியாயத்தை நிரூபிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார். கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார். வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான இந்த ஆன்லைன் கேம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, கேம் பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click here to join
Telegram Channel for FREE