Google Bard AI Chatbot: சாதக, பாதகங்களும் சிறப்பு அம்சங்களும் - ஒரு தெளிவுப் பார்வை

11 months ago 129

சி.ஆர்.சத்தியமூர்த்தி

Last Updated : 15 Jun, 2023 03:04 PM

Published : 15 Jun 2023 03:04 PM
Last Updated : 15 Jun 2023 03:04 PM

<?php // } ?>

சோறு வேண்டுமென்றால் விவசாயம் மற்றும் டெக்னாலஜி பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். சமீபத்தில், செயற்கை நுண்ணறிவைச் சுற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய டால்-இ மற்றும் சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கம்பெனி தனது செயலி ஆபீஸ் 365-ல் உள்ள பிங் தேடுபொறியில் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு, கூகுள் கம்பெனி உருவாக்கிய BARD, செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் என்றால் அது கூகுள், மைக்ரோசாப்ட், ஓப்பன் ஏஐ தான்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுளின் வருடாந்திர மாநாடு கூட்டம் 2023 மே 10 அன்று, மவுண்டன் வியூவின் ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் கூகுள் நடத்தியது. மாநாடு கூட்டத்தின் பெயர் I/O 2023. ஏஐ சாட்பாட் BARD இப்போது இந்தியா உள்பட 180 நாடுகளுக்கு பயன்படுத்த அனுமதி கிடைத்து உள்ளது.

பார்ட் (BARD) இந்த ஆண்டு 2023 பிப்ரவரியில் முதன் முதலில் பொதுமக்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டபோது காத்திருப்புப் பட்டியல் வழியாக மட்டுமே அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அணுக முடிந்தது. பார்ட் பயன்படுத்த காத்திருப்புப் பட்டியல் என்ற பேச்சுக்கு இனிமேல் இடம் இல்லை.

ஆரம்ப புள்ளி: கூகுளின் தேடுபொறியில், நீங்கள் கேள்வி கேட்கும் போது, வேண்டிய விடைகளை கொடுத்த பின், அந்த செய்தி உடன் தொடர்புடைய வேறு முக்கியமான சில தகவல்களையும் உங்களுக்கு கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் நினைக்கிறது. அதன் எண்ணத்தின் விளைவு தான் BARD என்ற செயலி. இது செயற்கை அறிவு ஏற்றபட்ட மென்பொருள் செயலி. BARD என்பது கூகுள் கம்பெனி உருவாக்கியது.

Bard? - இது மனிதர்களுடன் உரையாடல் செய்யக்கூடிய செயலி. மனிதர்கள் தங்கள் வினவல்களை தட்டச்சு செய்யலாம் அல்லது கேட்கலாம். கணினி திரையில் இருக்கும் ப்ராம்ப்ட்லில் (prompt) கேட்கப்படும் கேள்விகளுக்கு மனிதரைபோல உரைநடை பதில்களை உருவாக்கி நமக்கு விடையாக BARD தரும்.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் செயலிகளுக்கு பொதுவான பெயர் என்ன தெரியுமா? பொதுவான பெயர் ஜெனரேட்டிவ் AI என்பது ஆகும். டால்-இ, சாட்ஜிபிடி, பார்ட் எல்லாம் ஜெனரேட்டிவ் ஏஐ தான்.

ஜெனரேட்டிவ் ஏஐ? - புதிய உரை, படங்கள், வீடியோ, ஆடியோ, குறியீடு அல்லது சிந்தடிக் டேட்டா (synthetic data) முதலியவைகளை கணினிபல விதமான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, கணினி தானாகவே உருவாக்கும் . அத்தகைய கணினி செயலிகளுக்கு ஜெனரேட்டிவ் AI சிஸ்டம் என்று பெயர் .

இந்த பார்ட் செயலி எதை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது? - கணினி கற்றல் (machine learning),இயற்கை மொழி செயலாக்க நுட்பங்கள் (natural language processing techniques).

இந்த அதிகப்படியான தகவல்களை கூகுள் எப்படி உங்களுக்கு கொடுக்கிறது தெரியுமா ? - 'நாராயணமூர்த்தி - இன்போசிஸ்' எந்த ஊர்க்காரர் என்று கூகுள் தேடுபொறியில் தேடினால், அவரது ஊர் பெயரை நமக்கு கொடுதப்பதோடு, அதற்கு பிறகு அவர் தொடர்பு உள்ள வேறு சில தகவல்களையும் கூகுள் நமக்கு தருகிறது அல்லவா? நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றால் கூகுளின் Knowledge Graph Card-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

நாலேஜ் க்ராப் கார்டு: இதன் மூலமாகத்தான் கூடுதல் தொடர்புடைய தகவல்களை பொதுமக்களுக்கு கொடுத்து அவர்களை Google சந்தோஷப்படுத்துகிறது.

பார்ட் செயலி எப்படி வேலை செய்கிறது?

  • மனிதர்களுக்கே உரித்தான எழுதும் ஸ்டைலில் பதில் தருவதற்கு BARD க்கு பெரும் உரை அடிப்படையிலான தரவு தொகுப்பில் இருந்து (Massive Text Based Data Set) பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.
  • இந்த BARD செயலி பல அடுக்கு கொண்ட நியூரல் நெட்வொர் ஆர்க்கிடெச்சரையும் (Deep Neural Network Architecture) , அதில் வரும் ட்ரான்ஸ்பார்மர் (Transformer) என்ற மாடலையும் பயன்படுத்துகிறது.
  • நியூரல் நெட்வொர்க் எதற்காக BARD பயன்படுத்துகிறது? (1) மொழியின் வடிவங்களைக் கற்றுக்கொள்வதற்கும் (2) தன்னிடம் கேள்வியாக வரும் (input) உரையின் - செயல் நிகழும் சூழ்நிலையை புரிந்து கொண்டு பொருத்தமான பதிலை (output) திருப்பி கொடுப்பதற்கும் பயன்படுத்துகிறது.
  • உதாரணம் 1: திருச்செந்துர் கோவிலில் மக்கள் கூட்டம் கடல் மாதிரி. இங்கு கடல் என்பது மிக பெரிய மக்கள் கூட்டத்தை குறிக்கிறது. உண்மையான கடலை அல்ல. "மக்கள் கூட்டம்" என்ற வார்த்தையை டிரான்ஸ்ஃபார்மர் மாடல், உடனடியாகக் கவனித்து இந்த முடிவை எடுக்கும். இந்த வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளின் உறவுகளைக் கண்காணிப்பதன் மூலம் சூழலைக் கற்றுக்கொள்கிறது.
  • உதாரணம் 2: "I arrived at the bank after crossing the river”, "Bank" என்ற வார்த்தை ஒரு ஆற்றின் கரையைக் குறிக்கிறது, ஒரு நிதி நிறுவனம் அல்ல, டிரான்ஸ்ஃபார்மர் "river" என்ற வார்த்தையை உடனடியாகக் கவனித்து இந்த முடிவை எடுக்க கற்றுக் கொள்ளலாம்.
  • இணையத்தில் சென்று தேடுமா? பார்ட் கூகுளின் தேடுபொறியை அணுக முடியும், ChatGPTக்கு இணைய அணுகல் இல்லை. 2021 வரை மட்டுமே கிடைக்கும் தகவல்களில் ChatGPT பயிற்சி பெற்றுள்ளது.
  • மொழி மாடல் என்றால் (Language Models) : பல அடுக்கு கொண்ட நியூரல் நெட்வொர்க் (deep neural network) குறிப்பாக ட்ரான்ஸ் பார்மர், இதனை தான் Bard & ChatGPT இரண்டும் இயல்பான மொழி மாடல்களாக பயன்படுத்துகின்றன
  • இருவரும் பயன்படுத்தும் மொழி மாடல் பெயர். சாட் ஜிபிடி Large Language Model யை பயன்படுத்துகிறது. Google AI LaMDA மொழி மாடலின் கீழ் BARD இயங்குகிறது. (2018ல் கூகுள் வீட்டு A. I மீனா (Meena) இப்போது லாம்டா (LaMDA) என்ற பெயரில் வளர்ந்து வந்துள்ளது என ஊருக்குள் பேச்சு, காலம் தான் உறுதி படுத்த வேண்டும்)
  • கூகுள் தொடர்ந்து புதிய கண்டு பிடிப்புக்களை தரும் கம்பெனி அல்லவா? இதோ ட்ரைலர். விரைவில் PalM2 &. ஜெமினி (Gemini) என்ற வேறு சில புதிய மேம்படுத்தபட்ட மொழி மாடல்களில் BARD இயங்கும் என எதிர் பார்க்கலாம்.
  • பொதுமக்களுக்கு Google அதனுடைய டிரான்ஸ்ஃபார்மர் ஆழ் கற்றல் மாடல் -யை (Transformer Deep Learning Model) Google 2017ல் கிடைக்க செய்தது. இந்த செய்கையின் மூலம் ChatGPT மற்றும் பிற "லார்ஜ் லாங்குவேஜ் மாடல்களுக்கான" (large language model) அடித்தளத்தை Google தான் அமைத்து கொடுத்தது என்பது தான் உண்மையிலும் உண்மை
  • ஒருங்கிணைப்பு: மற்ற செயலிகளில் இது பெரும் பிரச்சனையாக உள்ளது. Google தயாரிப்புகளோ அல்லது Third-Party Plugins வகைகளோ BARDஐ ஒருங்கிணைப்பு (Integration) செய்து BARD ஐ பயன் படுத்த முடியும். எனவே BARDன் ஒருங்கிணைப்பு மிக பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
  • டாக்ஸ் (Docs), டிரைவ், ஜிமெயில், மேப்ஸ் மற்றும் பிற சில, இத்தகைய செயலிகளில் இருந்து கொண்டு BARD -ஐ பயன் படுத்த Google வழி வகைகள் செய்து உள்ளது
  • மற்றவைகள் வந்தால் பார்ட் தன்னுடன் சேர்த்து கொண்டு பணி செய்யும்: GPT-4 ஐப் போலவே, Google கம்பெனியும் மற்ற கம்பனிகளின் செயலி களை BARD உடன் சேர்த்து add-on முறையில் அருமையாக செயல்பட Google தன் ஆதரவை (Support) வழங்கும். (add-ons...Wolfram, Khan Academy, ZipRecruiter, OpenTable, Kayak,OpenTable)

நல்லது & கெட்டது உண்டு. சிலவற்றை இங்கே பார்க்கலாம்

  • அதிக மனிதர்கள் கிடைக்காத அல்லது பணியமர்த்த விரும்பாத, வணிகங்களுக்கான தானியங்கு ஆதரவு செயலியாக BARD செயல்படும் (automated support application) நோக்கம் கொண்டது.
  • பல வணிகங்கள் , மனிதர்கள் உதவி இல்லாமல், சேவைகளை தானே இயங்கும் அரட்டை ரோபோ செயலிகள் (ChatBot) மூலமாக தந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கே தெரியும். இந்த மாதிரி அரட்டை ரோபோ செயலிகளை இந்த BARD மூலம் சிறப்பாக இயக்க முடியும் என்பதுதான் இங்கு முக்கியமான செய்தி.
  • Image Prompting: GPT-4 வெளியீட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, படத்தை கொடுத்து பதில் கேட்டல் இன்னும் வெற்றிகரமாக முடியவில்லை. பார்ட் இதை பூர்த்தி செய்யுமா? உதாரணமாக கீழே உள்ள ஒரு நாய் படத்தை பார்ட் செயலிடம் பதிவு ஏற்றம் செய்து நாய் எந்த இனத்தை சேர்ந்து என்றால் , படத்தை பார்த்து விட்டு BARD ஸ்வீடிஷ் லாஃபண்ட் என்று பதில் சொல்லும் அளவுக்கு செயற்கை அறிவை மென்பொருள் அறிவுக்குள் செலுத்தி உள்ளார்கள். கூகுள் பல ஆண்டுகளாக உருவாக்கிய தொழில்நுட்பமான கூகுள் லென்ஸ் மூலம் இந்த அம்சம் இயங்கும்
  • ChatGPT மற்றும் Bing AI போன்ற பெரும்பாலான AI சாட்போட் களில் இல்லாத ஒன்று. பார்ட்ல் உருவாக்கப்பட்ட உள் அடக்க த்தை (contents) ஏற்றுமதி செய்ய பார்ட் செயலியால் முடியும். (ஏற்றுமதிக்கு நல்ல உதாரணம் : உங்கள் மொபைலில் இருந்து, உங்கள் காண்டாக்ட் பெயர்கள் பட்டியலை ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்புதல் செய்வது.
  • பார்ட் அறிவியல், கணிதம், வரலாறு, இலக்கியம் மற்றும் மதம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சூழ்நிலைக்கு ஏற்ப சரியான பதில்களை உருவாக்கும் திறன் கொண்டது.
  • பார்டின் அம்சங்களில் ஒன்று, பல்வேறு மனிதர்களுடன், வேறு பட்ட உரையாடல்களில் ஈடுபடும் திறன் ஆகும் (Multi-Turn Conversations)
  • இப்போது உள்ள எல்லா AI சாட்போட் செயலிகள் தரும் பதில்கள சில பல தருணங்களில் சரியாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
  • அரட்டை ரோபோ அல்லது சாட்போட்கள் மற்றும் (b) மெய்நிகர் உதவியாளர்கள் (Virtual Assistants) போன்ற செயலிகளுக்கு BARD மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகிறது.
  • ஆக்கப்பூர்வமான எழுத்தை (creative writing) , இணையதள உள்ளடக்கத்தை, (Content creation) சமூக ஊடக இடுகைகளை உருவாக்கவும் (social media posts), பார்ட் செயலியால் முடியும்.
  • சாட்ஜிபிடி & பார்ட் - இவைகள் உடனடியாக வெளிப்படையாக தெரியாத சிக்கல்களால் வரும்காலங்களில் பாதிக்கப்படலாம்.

என்ன இருக்கு சிறப்பு அம்சங்கள்?

  • தேடுபொறியில் சரியான பதில் கிடைக்காத தேடல்களுக்கும் (NORA No One Right Answer) BARD பார்ட் பதிலளிக்கும் வகையில் கூகுள் இந்த பார்டை செதுக்கி செதுக்கி உருவாக்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன, எந்த அளவுக்கு உண்மை என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
  • இந்த செயலியின் மாடல் எப்படி அமைத்து உள்ளார்கள் என்று தெரியுமா? மனிதர்களுக்கே உரித்தான எழுதும் ஸ்டைலையும் & மனிதர்களுக்கே உரித்தான எழுத்து கட்டு அமைப்பையும் (structure) இந்த செயலி பிரதிபலிக்கும் வகையில் வடிவ அமைக்கப்பட்டுள்ளது.
  • பார்டின் பதில்களை மேலும் மேலும் கண்கள் மூலம் 'காட்சி' (Visual) யாக காட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதில் கூகுள் குறியாக இருக்கிறது
  • பார்ட் தொடர்ந்து இணையத்திலிருந்து (Internet) சமீபத்திய தகவல்களைப் பெறுகிறது. எனவே பதில்களை சமீபத்திய தகவலை அடிப்படையாகக் கொண்டது. சாட் ஜிபிடி -3.5 மற்றும் அதன் புதிய பதிப்பு 2021 க்கு முன்னர் உள்ள தரவுகளின் அடிப்படையாக பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது
  • புனைகதைகளிலிருந்து உண்மையைத் வரிசைப் படுத்தி, பாதுகாப்பான கருத்துகளை எப்போது வெளியிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கூகுளுக்கு நிறைய அனுபவம் உள்ளது, அதாவது, பெரும்பாலும் உண்மையாக ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்துக்கள் , கோட்பாடுகள் மற்றும் அந்த நேரத்தில் கிடைக்கும் மிகத் துல்லியமான தகவல்களை வெளியிடும்.

செயற்கை நுண்ணறிவு ஆட்டம் ஆரம்பம் ஆகிறது

முதல் வகுப்பு குழந்தை, 'அ.. ஆ..' எழுத்துக்களை , பார்த்து பிரமிப்பு அடைகிறது. நாம் கூட செயற்கை நுண்ணறிவில் வந்த மென்பொருள் செயலிகளை பார்த்து பிரமிப்பு அடைக்கின்றோம். போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. பூமி உயிர்களுக்கு என்ன நடக்குமோ கவலை எழுகிறது. நினைவுக்கு வருகிறது. பாரதியின். புதியன விரும்பு ; பூமி இழந்திடேல்.

- சி.ஆர்.சத்தியமூர்த்தி | டெக் ஆர்வலர் | தொடர்புக்கு callbalaji@yahoo.com

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!