பவர் பேங்கை முறையாகப் பயன்படுத்துவது எப்படி?

தற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்பட்டுள்ள ஏராளமான வசதிகள் காரணமாக அவற்றின் மின்கலங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு நேரமே சார்ஜ் காணப்படுகின்றது.

பவர் பேங்கை முறையாகப் பயன்படுத்துவது எப்படி?
Power Bank

தற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்பட்டுள்ள ஏராளமான வசதிகள் காரணமாக அவற்றின் மின்கலங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு நேரமே சார்ஜ் காணப்படுகின்றது.

இதனால் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

எனவே அதிகளவானவர்கள் Power Bank எனும் சாதனத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இச் சாதனத்தினைப் பயன்படுத்துவதற்கான சில குறிப்புக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

Power Bank ஆனது முழுமையாக சார்ஜ் ஆகிய பின்னர் தொடர்ந்து சார்ஜ் ஆவது தானாக நிறுத்தப்படுமா?

ஆம், Power Bank இலுள்ள ஸ்மார்ட் மின்சுற்று மூலம் அவை முழுமையாக சார்ஜ் ஆகியமை கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து சார்ஜ் செய்யப்படுவது நிறுத்தப்படும்.

இதனால் வெப்பமேறி வெடிப்பு சம்பவங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

Power Bank சாதனத்தினை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?

  • Power Bank ஆனது அதிகமாக வெப்பமாகாதவாறும், ஈரலிப்பான இடங்களில் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • Power Bank சார்ஜ் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் கைப்பேசிகளை பயன்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும்.

  • Power Bank சாதனத்தினை ஒரு சீரான இடைவெளியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்திவர வேண்டும்.

  • பிரத்தியேக சார்ஜரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Power Bank முழுமையாக சார்ஜ் ஆகிவிட்டதை தெரிந்துகொள்வது எப்படி?

ஒவ்வொரு வகையான Power Bank சாதனத்திலும் LED மின்விளக்குகள் காணப்படும். இவை Power Bank மின்கலங்கள் சார்ஜ் ஆகும் ஒவ்வொரு கட்டத்தினையும் காண்பிக்கும்.

அதேபோன்று முழுமையாக சார்ஜ் ஆகிய பின்னர் அனைத்து LED மின்விளக்குகளும் ஒளிர ஆரம்பிக்கும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்


Click here to join
Telegram Channel for FREE