Paytm Layoff: உச்சத்தில் AI தொழில்நுட்பம்! ஒரே அடியாக 1,000 ஊழியர்களை கழற்றிவிட்ட பேடிஎம் நிறுவனம் - என்ன நடக்கிறது?

4 months ago 137

ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

By: உமா பார்கவி | Updated at : 25 Dec 2023 06:33 PM (IST)

 உச்சத்தில் AI தொழில்நுட்பம்! ஒரே அடியாக 1,000 ஊழியர்களை கழற்றிவிட்ட பேடிஎம் நிறுவனம் - என்ன நடக்கிறது?

பேடிஎம்

ஏஐ தொழில்நுட்பம்:

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி  தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே செல்லலாம். சாட்சிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று கூட  ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.  இந்த நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 1000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. 

1000 பேர் பணிநீக்கம்:

இதுகுறித்து பேடிஎம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  தற்போது பல நிறுவனங்கள் தங்கள் வேலைகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளன.  மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை செய்யும் வேலைகளில் இருக்கும் நபர்களை நீக்கவிட்டு, அதற்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் செலவுகளை குறைக்கிறது. அதாவது, ஊழியர்களின் செலவினத்தில் 10 முதல் 15 சதவீதம் சேமிக்க முடிகிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட ஏஐ தொழில்நுட்பம் இந்தளவுக்கு பலனைத் தரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஏஐ தொழில்நுட்பம் வேறு எந்த துறைக்கும் பயன்படும் என்பதை ஆய்வு செய்து, அதில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளோம்” என்றார்.

"ஏஐ தொழில்நுட்பம் தான்”

பேடிஎம்மின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா, மைக்ரோசாப்ட்  மற்றும் கூகுள் AI கருவிகளைப் பயன்படுத்தி  வருகிறார்.  இதனால், பணிநீக்கம் நடவடிக்கை தொடரும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டில் 700 பேரை பணிநீக்கம் செய்தது பேடிஎம் நிறுவனம்.  

அதே நேரத்தில், பேடிஎம் நிறுவனம்  அதிக வணிகர்களைப் பெற 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில், பேடிஎமில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை உயர்த்துவதே அந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும்,  ஏ.ஐ. தொழில்நுட்பத்தால், கூகுள் நிறுவனத்தில் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க

Corona JN.1 Variant: தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா.. இந்தியாவில் இதுவரை 63 பேருக்கு பாதிப்பு..

Odisha Shocker: ஒடிசாவில் கொடூரம் : காலிஃப்ளவருக்காக பெற்ற தாயை தாக்கி, மின்கம்பத்தில் கட்டிவைத்த மகன்..

Published at : 25 Dec 2023 06:33 PM (IST) Tags: Artificial intelligence layoff Paytm Layoff ai model