ஐக்யூ ஸ்மார்ட்போன் விற்பனை 82 சதவீதம் உயர்வு

9 months ago 82

செய்திப்பிரிவு

Last Updated : 26 Jul, 2023 06:56 AM

Published : 26 Jul 2023 06:56 AM
Last Updated : 26 Jul 2023 06:56 AM

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஐக்யூ நிறுவனத்தின் சிஇஓ நிபுன் மரியா, தயாரிப்பு பிரிவு தலைவர் சங்கர் சிங் சவுகான் (வலது).
<?php // } ?>

சென்னை: தமிழ்நாட்டில் ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனைகடந்த நிதி ஆண்டில் 82 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி (சிஇஓ) நிபுன் மரியா தெரிவித்து உள்ளார்.

சீனாவைச் சேர்ந்த விவோ மொபைல்போன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐக்யூ கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவரும் இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தங்களது சந்தையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று சென் னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐக்யூ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் சிஇஓ நிபுன் மரியா கூறியதாவது:

ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியமக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில்ஐக்யூ நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் 82 சதவீதமாக உயர்ந்துள்ளது.

5 ஐந்து மாநிலங்களில்.. ஐக்யூ போன்கள் அதிகமாக விற்பனையாகும் டாப் 5 ஐந்து மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இதனால், இங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ரூ.10 ஆயிரம் விலைகொண்ட ஸ்மார்ட் போன்கள் பிரிவில் வேகமான வளர்ச்சியை எட்டிவருகிறோம். இவ்வாறு நிபுன் மரியா தெரிவித்தார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!