பட்ஜெட் விலையில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

6 months ago 75

செய்திப்பிரிவு

Last Updated : 19 Oct, 2023 11:56 PM

Published : 19 Oct 2023 11:56 PM
Last Updated : 19 Oct 2023 11:56 PM

பிரதிநிதித்துவப் படம்
<?php // } ?>

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் ஏ சீரிஸ் வரிசையில் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • முன்பக்கம் 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது
  • 5,000mAh பேட்டரி
  • 6ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 25 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 4ஜி நெட்வொர்க் இணைப்பு
  • இந்த போனின் விலை ரூ.14,999

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!